இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்கா இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய சந்திப்பின் போது, இலங்கை உட்பட தென்னாசியாவில் சீனாவின் தலையீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டனில் இரண்டாவது அமெரிக்க இந்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. இதன் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் சயெலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் பின்னர் 18ஆம் திகதி நடைபெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில், கருத்துத் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தாங்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயங்கள் குறித்து மேலதிக தகவல்களை அவர் வழங்கவில்லை.

தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் கலந்துரையாடியதாக கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.