இலங்கை தொடர்பான தீர்மானம் மார்ச் மாதம் ஜெனீவாவில் – தமிழர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளுமா?

இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது உள்நாட்டு அரசியல் முடிவு என்று ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபயாவும், சஜித் பிரேமதாசாவும் தெரிவித்திருந்தனர். இதற்கு மேற்கத்திய நாடுகள் இதற்கு விசனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜெனீவா தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கோத்தபயா ராஜபக்ஸ இராஜதந்திரிகளிடம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் கட்சிகளினதும் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் அழுத்தங்கள் தற்போதைய நிலையில் அவசியமானது எனவும், இதன் மூலம் தற்போது சிறீலங்கா அரசுக்கு எதிராக திரும்பியுள்ள மேற்குலகத்தின் போக்கை பயன்படுத்த முடியும் என அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயா அரச தலைவராக வெற்றிபெற்றால் சிறீலங்காவுக்கும் மேற்குலகத்திற்குமான இந்த விரிசல்கள் மேலும் மோசமடையும் எனவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.