இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பற் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது,

எனினும் இதனை மீள நடைமுறைப்படுத்தப்படுத்துவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி போன்று பொருட்களின் பரிமாற்றத்திற்கும் அத்தியவசியமானதாக அமையும். அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுடன் நேரிடையான தொடர்புகளை மேற்கொள்வதற்கு அண்மைக்காலமாக இந்தியா முயன்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய திட்டங்கள் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.