இலங்கையில் நீதித் துறை சுயாதீனமாக செயற்படுகின்றது என்கிறார் சம்பந்தன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அண்மையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களின் ஒற்றுமைகாரணமாகவே இலங்கையில் இன்று ஜனநாயகம் நிலவுகின்றது எனவும் இலங்கையில் நீதி மன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்தார் இவ் கருத்து தமிழ் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் 11ம் திகதி மகிந்தராஜபக்ஸ அவர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஆகிறார் அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருடன் அக்கட்சியில் இணைகின்றனர் 19வது அரசியல் அமைப்பின் படி தேர்தலில் போட்டியிட்ட கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாறுகின்ற பொழுது மகிந்தராஜபக்ஸ வகித்த எதிர் கட்சி தலைவர் பதவியை இழக்கின்றார் அப்பொழுது பாராளுமன்றத்தில்
இரண்டாவது பெரும்பாண்மை கட்சியாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது என கூறும் சம்பந்தன் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எதிர்கட்சி தலைவர் பதவியை மீண்டும் பெறுவாரா?

மேலும் காணாமல் போனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக வழக்குகள் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல்கைதிகள் விடயம் போன்றவற்றில் சிறப்பு விசேட நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்களின் வழக்குகள் திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் விசேட நீதிமன்றமும் செயலிழந்துள்ளது. நீதித் துறை சுயாதீனமாக இயங்குகின்றது என மார்தட்டி கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இது தெரியாதா?

நீதித்துறை சிறப்பாக இருந்திருந்தால் அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயமான அடிப்படை உரிமைகள் குறித்த விதியின் பத்தாவது பிரிவில் உள்ள பிரஜைகள் அனைவரும் மதச் சுதந்திரம், சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பனவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும் என்கிறது. ஆனால் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை திட்டமிட்ட வகையில் புகுத்துவது போன்ற செயற்படுகளை பார்க்கின்றபோது நீதித் துறை சுயாதீனமாக இயங்குகின்றது என எந்த வகையில் கூறுவது

காணாமல் போனவர்கள் தொடர்பாக சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் மற்றும் பரிகாரம் தொடர்பான
அலுவலகம் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்தவொரு அழுத்தமும் கொடுக்காமல் ஜநா மனித உரிமை பேரவையில் மூன்று தடவைகள்(2021 வரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுடைய  கையொப்பத்தோடு காலநீடிப்பை பெற்றுகொடுத்து காணமல் போனவர்கள் விடயத்தை நீர்த்துபோக செய்துவிட்டார்கள்.

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சட்டமூலம் அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றும் போது வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கபட்டோர்களுக்கான எட்டு மாவட்டத்தை சேர்ந்த சங்கத்தினருடன் சட்டமூலம் தொடர்பான சாதக பாதகங்களையும் நேரடியாக பாதிக்பட்டவர்களின் விருப்பங்களையும் அறியாமல் விவாதம் நடைபெற்ற நாள் அன்று காலையில் இவ் சட்டமூலத்தில் ஒன்றும்
இல்லை என்று பேசிவிட்டு மாலையில் இவ் சட்டமூலத்திற்கு ஆதரவாக
வாக்களித்தார்கள். இது காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.

காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு,கிழக்கில் பல தடவைகள் காணமால் ஆக்கபட்டோர் அலுவலகம் (OMP) வேண்டாம் என்று கவனஈர்ப்பு போராட்டம் செய்தபோது கூட்டமைப்பினர் OMP வேண்டும் என்று அவர்களுடைய போராட்டத்தில் குழப்பம் விளைவித்தனர் கடந்த
மூன்றரை வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதி பிரதமருடன் சம்பந்தன் கூட்டமைப்பினர் தேனும் பாலுமாக இருந்தபோது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு முன் உயிருடன் கையளித்தவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை இன்று வரை பெற்றுக்கொடுப்பதற்கு தயார் இல்லதா நிலையில் அரசாங்கத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படி இருக்கையில் நீதி துறை சுயாதீனமாக இயங்குகின்றது என்றும் காணமால் ஆக்கபட்டோர் விவகாரத்தில் தாம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் சம்பந்தர் கூறுவது 900 நாட்களாக வீதியில் இருக்கும் அவ் உறவுகளையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றப்பார்க்கின்றார் என்பது தெளிவாகிறது தமிழ் மக்கள் இனியும் இவர்களது பசப்பு வார்த்தைகளுக்கு ஏமார தயார் இல்லை என்பதை குறுகிய காலத்திற்குள் நிருபித்து காட்டுவார்கள் என புத்தஜீவிகளும் சமூக ஆர்வலர்களும்
கருத்து தெரிவித்துள்ளனர்.