இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்

பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது.

தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது.

சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுகைப் பயங்கரவாதம் தமிழர் தாயக பூமியை சிங்களமயப்படுத்தி அதற்கு உதவியாக இராணுவமயப்படுத்தியதும், சிறீலங்காவில் தமிழர் இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழ் மொழியை அழித்து, தமிழர்களின் கலை, பண்பாட்டை சீரு்குலைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர் வரலாற்றைத் திரித்து, தமிழ்த் தேசியத்திற்கான எண்ணக்கருவை அழிக்கும் சிங்கள அரசுகளின் இச் செயற்பாடுகள் சிறீலங்காவில் தமிழர்களின் வாழ்வுரிமையையே மறுத்து வருகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக சிறீலங்காவில் அமுல்ப்படுத்தப்பட்ட பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பிரதேசசபைச் சட்டம், மாவட்ட அபிவிருத்திச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியவற்றைக் கூறலாம். இச்சட்டங்கள் யாவும் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவும், சிங்கள இனத்திற்கு சார்பாகவும் அமைந்தன.

இதேபோன்று தான் சிங்களத் தலைமைகளால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும்கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை. மாறாக தமிழினத்திற்கு எதிராகவே அமைந்தன.

  • பண்டா – செல்வா ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் பண்டாரநாயக்காவுக்கும் தமிழ்த் தலைவர் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். 1957 ஜுலை 26இல் கையெழுத்தானது.

  • டட்லி – செல்வா ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் டட்லி சேனநாயக்காவிற்கும் தமிழ்த் தலைவர் தந்தை செல்வா என அழைக்கப்படும் செல்வநாயகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம். 1965 மார்ச் 24இல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் தமிழர் பிரச்சினைக்கான தீர்பாக பிரதேச மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கல் என்ற அம்சங்களை கொண்டிருந்தது.

  • ஜே.ஆர் – அமிர்தலிங்கம் ஒப்பந்தம்

சிங்களத் தலைவர் சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கத்திற்கும் இடையேயானது. இது மாவட்ட மட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கி அதிகாரத்தை பரவலாக்கல் என்பது பற்றிக் கூறியது.

  • பிரேமதாசாவின் பிரதேச சபைகள் திட்டம்

சிறீலங்கா அதிபர்  ரணசிங்க பிரேமதாசாவால் கொண்டு வரப்பட்டது.  பிரதேச மட்டத்தில் பிரதேச சபைகளையும், பிரதேச செயலர் பிரிவுகளையும் உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துதல். இத்திட்டத்தல் உருவான பிரதேச செயலர் பிரிவுகளுக்கான பிரதேச செயலர்களுக்கு அரச அதிபருக்கு இணையான ஆளுகை அதிகாரத்தை வழங்குதல் என்ற விடயம் இருந்தது.

  • இந்திய – இலங்கை ஒப்பந்தம்

113967054 indiaslagreement இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்இது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் சிறீலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்குமிடையே 29 ஜுலை  1987இல் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்றி எழுதப்பட்டது. இது தமிழர் தாயகத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து, பின்னர் அவற்றை பிரிக்கும் சூழ்ச்சியைக் கொண்டிருந்தது.

  • சந்திரிக்காவின் கிழக்கு மாகாணத்தை துண்டாடும் திட்டம்

சிறீலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்டது. இத்திட்டம் தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கென உருவாக்குதல். தமிழ்ப் பகுதியை வடக்கு மாகாணத்துடன் இணைத்தல் என்ற விடயத்தைக் கொண்டிருந்தது.

இந்த ஒப்பந்தங்களும் திட்டங்களும் சிங்களத் தலைமைகளாலும் இந்திய அரசாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தமிழர்களின் உரிமைகளுக்கான தீர்வாக அமையவில்லை. அவை தமிழர் தாயகத்தில் காணி (நில உரிமை), காவல் மற்றும் நிதி ஆளுகைகளை  தமிழர்களுக்கு தர மறுத்தது. சிங்களவர்களின் ஆளுகையையும், அதிகாரங்களையும் தமிழர் தாயகத்தில் மேலும் பலப்படுத்துவதாகவும் அமைந்தன. தமிழர்காளல் முன்வைக்கப்படட தமிழர்களுக்கான சுயாட்சித் திட்டங்களை இந்த ஒப்பந்தங்களும் திட்டங்களும் புறக்கணித்தன. இவை தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அதிகாரமற்றவர்களாக வாழும் நிலைகளை ஏற்படுத்தியது.

kepapulavu4 இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்இதன் விளைவாகவே சாத்வீக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வாக தமிழீழம் என்ற நோக்க இலக்கை வைத்து போராடினார்கள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக்கி, சிங்கள அரசுகளும், உலக அரங்கும் இணைந்தும் உருவாக்கியுள்ள இன்றைய நிலை மாற்றப்பட வெண்டும். இந்த நிலை தமிழர்களின் பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதில்லை.

சிங்கள அரசுகளின் சூழ்ச்சியும் செயற்பாடுகளும் உலக அரசுகளின் நலனும் ஒன்றிணைந்து தமிழர் விடுதமலப்போராட்டத்தை மௌனமாக்கியுள்ளது. இதன் விளைவு

  • தமிழர் தாயகம் சிங்களமயப்படுத்தப்படும் வகையில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
  • சொந்த மண்ணில் தமிழர்கள் சுதந்திரமற்றவர்களாக பாதுகாப்பின்றி அவல நிலையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • தமிழர்கள் அகதிகாளக புலம்பெயர்ந்து வாழும் நிலை உருவாகியுள்ளது.
  • தமிழர்களின் இனப்பரம்பல் குறைக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மக்களின் உரிமைக்குரல் சிறீலங்கா பாராளுமன்றத்தில் பலவீனமாகி உள்ளது.
  • சிங்கள அரச பயங்கரவாதம் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உலக அரங்கை ஏமாளியாக்கி மௌனமாக்கியுள்ளது.
  • தமிழர் விடுதலையை மறுத்து தமிழ் இனத்திற்கு எதிராக சிங்கள இனவாதம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைகள் மாற்றப்பட வேண்டும். சாத்வீக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய தமிழினம், தமது போராட்டத்தை இராஜதந்திர வழியில் உலக அரங்கில் ஒன்றிணைத்து எழுச்சிபெற்று தமிழீழம் மற்றும் தமிழகத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்லி தமிழர் விடுதலைப் போராட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கையில் தமிழர் தாயகம் இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட ஒன்றிணைவோம். உலக அரங்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்புவோம்.

தொடரும்…