இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கின்றது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன் முகநூல் கேள்விக்கான பதிலில், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதியளிக்கவில்லை. ஐ.தே.க.யை ஆட்சியில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை. மக்களே அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த அரசையும் அவர்களே தேர்ந்தெடுக்கப் போகின்றனர். முழுமையான இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கும்

மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கும். எந்த அரசு பதவிக்கு வந்தாலும்  அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது.  சிறிலங்காவின் பாதுகாப்பை அமெரிக்கா மதிக்கின்றது.

MCC எனப்படும் Millennium Challenge Corporation  உடன்பாடு என்பது ஒரு நிர்வாக உடன்பாடாகும். இது நுழைவு, வெளியேறும் தேவைகள் தொழில்முறை உரிமங்களை அங்கீகரித்தல் மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உட்பட வழமையான நடைமுறைகளை தரப்படுத்துகின்றது. இதற்காக 40 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி கடனாக அல்லாது அமெரிக்க ஒத்துழைப்பு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கொடையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.