இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவர் இராணுவத்தளபதியா? –  நாடாளுமன்றில் சிறீதரன்

இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில்,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன  சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங் களைக்கொண்டு வருவேன் . மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன் றொழித்த , இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன்  என்று சொல்கின் றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

தமிழ் மக்களின் இரத்தம் குடித்த  சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டு ள்ளமை மிகவும் அபாயகரமானது.

 

அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது என்றார்.