இரத்த கறைபடிந்த கைகளுடன் ஒருவர் நாட்டின் தலைவராக முடியாது – மங்கள

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம் மஹிந்த எதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

‘இலங்கையும், அதன் மக்களும் ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து’ என்பதாகவே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டமையைத் தொடந்து அமைச்சர் மங்கள சமரவீர மிகநீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.