இரட்டை முகத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு செயற்படுகின்றது ; ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரட்டை முகத்துடன், செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக இருந்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுனில் ஹந்துநெத்தி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்ததுடன், வரவு செலவு திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியிருந்தனர். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்திற்கு ஒரு சதத்தினை கூட செலவிடமுடியாமல்போனது. தற்போது ராஜபக்ச தரப்பினரை நோக்கி நகர்கின்றனர். இது அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை முகத்தை காட்டுகிறது” என்றார்.