இன்னும் 10 வருடங்களில் தமிழினம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் – மகப்பேற்று மருத்துவர் சி.சிவச்சந்திரன்

திருமண வயது முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது. தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது.ஒரு இனம் நிலைத்திருப்பதற்கு 2 இற்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரு பெண் பெற்றிருக்க வேண்டும்.  அல்லது அந்த இனம் சிறிது சிறிதாக அழிவடைந்து போகும். இது எமது தமிழர்களிடையே இரண்டைவிட குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது எமது இனம் அழிவடையும் சூழலிலேயே உள்ளது என மகப்பேற்று வைத்திய நிபுணர் சி.சிவச்சந்திரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இது எமது நாட்டில் மட்டுமல்ல உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் உதாரணமாக பிரான்ஸ் நாட்டில், அந்த நாட்டவரது பிறப்பு வீதமும் இரண்டாக அல்லது அதைவிடக் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் அங்குள்ள முஸ்லிம்களின் பிறப்பு வீதம் எட்டாக இருக்கின்றது. இதனால் இன்னும் 20 வருடங்களில் பிரான்ஸ் நாடு ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடும்.  இது முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூறுவதற்காக அல்ல. ஒரு நாட்டில் அந்த இனம் அழிந்து வேறொரு இனம் தலையெடுப்பதைக் கூறுவற்கு உதாரணத்திற்காகவே கூறுகின்றார்.

இதே நிலை தான் இலங்கையிலும் வரவுள்ளது.  இலங்கையிலும் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் இரண்டிற்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களில் நாம் மூன்றாவது இனமாகப் போய்விடுவோம்.

குழந்தைப் பேறு பற்றி ஒரு இனமாக நாம் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. பொதுவாக இலங்கையில் பிறப்பு வீதம் 17ஆக இருக்கின்றது.  வடக்கில்   இந்த பிறப்பு வீதம் 15ஆக இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் இது 14ஆக இருக்கின்றது. பத்து வருடங்களிற்கு முன்னர் பிறப்பு வீத வித்தியாசம் 2ஆக இருந்தது. ஆனால் இப்போது அதற்கும் அதிகமாக உள்ளது.

இது எதைக் காட்டுகின்றதென்றால், தமிழினம் சிறிது சிறிதாக அழிவடைந்து கொண்டு போகின்றது என்பதைக் காட்டுகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்றால், சமூகக் கட்டமைப்பை பார்க்கும் போது, 50 வருடங்களின் முன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குடும்ப வாழ்க்கை என்பதைவிட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஏனைய சமூகத்தினர் 27 வயது வந்ததும் தாம் திருமண வயதை எட்டியதை கருத்தில் கொள்கின்றனர. தமிழர்கள் அப்படியல்ல. மற்றைய சமூகத்தினரை விட தமிழ் சமூகத்தினர் கல்வி, வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒருவர் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடிக்க 26 வயது வந்துவிடும், அதன் பின்னர் அவர் வேலை செய்து அனுபவம் என்று வரும் போது அவருக்கு 30 வயது வந்து விடும். இதை இளைஞர்கள் கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு உடன் வேலை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் திருமணம் முடிக்கும் வயது பின்தள்ளப்படுகின்றது.

படிக்காதவர்கள் தங்கள் வேலையை கருத்திற் கொள்கின்றனர். முன்னர் கொழும்பில் வியாபாரத்தில் பெருமளவானவர்கள் தமிழர்களே. காலம் செல்ல செல்ல இவர்களும் படித்துப் பட்டம் பெறவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டனர். அல்லது வெளிநாடு செல்வது  இவ்வாறான காரணங்களினால் தமிழர்களின் திருமண வயது தள்ளிச் செல்கின்றது. இதை இளைய சமூகம் சிந்திக்க மறுக்கின்றது. மற்ற இனத்தவர்களின் திருமண வயது குறைவாக உள்ளது. முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது.

தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது. இதற்குக் காரணம் திருமண வயது தள்ளிப் போனதாக கூறப்படுகின்றது. இதற்குக் காரணம் பெண்கள் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, ஒரு நம்பிக்கையான துணை வரும் வரை திருமணத்தைத் தள்ளிப் போடுவதாக அறிய முடிந்தது.

இவர்கள் இனத்தின் அழிவிற்கு தமது பங்கை வழங்குகின்றார்கள் என்று சொல்ல வேண்டும். மற்றையது மொழியின் அழிவிற்கும் இவர்கள் செல்கின்றனர். இது வெளிநாடுகளில் பெரும்பாலும் காணப்படுகின்றது. இது சாஸ்திரக்காரர்களும் முக்கிய பங்கை வகிக்கின்றனர். பிள்ளைக்கு பெயர் சூட்டும் போது, தமிழ் பெயர்கள் வரமுடியாத எழுத்துக்களை அவர்கள் கொடுக்கும் போது, அதில் தமிழ்ப் பெயர்கள் வைக்க முடிவதில்லை.

தமிழ்ச் சமூகத்தில் திருமணம் தள்ளிப் போக முக்கிய காரணம் ஜாதகப் பொருத்தமின்மை. சாஸ்திரத்தை நம்பினாலும் அது எமது சமூகத்தை அழித்துக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும். அடுத்தது சீதனப் பிரச்சினை. அடுத்தது திருமணமானவர்கள் எமது நாட்டில் கப்பலில் வேலை செய்கின்றனர். இவர்கள் இரண்டு மூன்று மாதங்களே வீட்டில் தங்குவர். ஏனைய காலங்களில் கப்பலில் வேலைக்கு சென்று விடுவர். இது போன்ற காரணங்களும் குழந்தைப் பேற்றை தள்ளிப்போட வைக்கின்றது.

யாழ். மாவட்டத்தில் 2016இல் பாரிய வீழ்ச்சியடைந்து வந்தது. குழந்தை பிறப்பு வீதம் 11ஆக இருந்தது. ஆனால் தற்போது கடந்த 3 வருடங்களில் அதிகரித்து தற்போது 14 என்ற நிலையை அடைந்துள்ளது.

இனிவரும் காலத்தில் எமது தமிழ் இனம் அழிவடைவதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டிய கடமை எம்மிடம் உள்ளது. இதற்குரிய தீர்வு என்பது என்னவென்று தெரியாத போதும், இதற்கான காரணத்தை தான் தெரியப்படுத்துவதாக கூறினார்.