இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்துகின்றது சிறீலங்கா

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவுகள் பலப்படுவதை திட்டமிட்டு தடுத்துவரும் சிறீலங்கா அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடனான தனது உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது.

யாழ் பலாலியில் இருந்து மேற்கொள்ளவுள்ள வானூர்தி சேவையில் தமிழகத்தை புறக்கணித்துள்ள சிறீலங்கா அரசு இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது.

சிறீலங்காவின் சிங்கள மக்களுக்கும் ஒரிசா மாநிலத்திற்கும் இடையில் நீண்டகால வரலாற்றுத் தொடர்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம், இந்தியாவுக்கான சிறீலங்கா தூதுவரான ஒஸ்ரின் பெர்னாண்டோவையும் அங்கு அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஒரிசாவுக்கு பயணம் மேற்கொண்ட பெர்னாண்டோ ஒரிசா ஆளுநர் பேராசிரியர் கணேஸ் லால், சுற்றுலாத்துறை அமைச்சர் ஒலிடா லங்குகே மற்றும் கலாச்சார அமைச்சர் ஜோதி பிரகாஸ் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஒரிசாவுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு பலப்படுத்துவது, ஒரிசாவில் பௌத்த மதத்தை பலப்படுத்துவது, அதேசயம் சிங்களப் பகுதிகளில் ராமாயணத்தை கொண்டுவருவது, கொழும்புக்கும் ஒரிசாவுக்குமிடையில் வானூர்தி சேவையை மேற்கொன்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது.