இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 7

7. சாவகச்சேரி சந்தைப் படுகொலை 27 அக்டோபர் 1987

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும்.

1987 அக்டோபர் இருபத்தேழாம் திகதியன்று கந்தசட்டி சூரன் போர் ஆகையால்ää நகரத்திலிருந்த ஆலயத்திலிருந்து சூரன் வீதியால் வீதியுலா சென்று கொண்டிருநத் நேரம் மதியம் 12மணியளவில் வானில் வந்த இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. பீதியடைந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாது அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர். தொடர்ச்சியாக மக்கள் மீது உலங்குவானூர்தி ஏவிய றொக்கட் குண்டுகளால் சந்தைக்கு வந்த அறுபத்தெட்டுப் பொதுமக்கள் உயிரிழந்தார்கள், நூற்றி எழுபத்தைந்து பேர் காயமடைந்தார்கள். இந்து ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது.

சாவகச்சேரிச் சந்தையில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தவர்களும் வாங்கிக் கொண்டிருந்தவர்களும் உலங்குவானூர்தித் தாக்குதலுக்குள்ளாகினர். சந்தையில் இருந்தவர்களில் எல்லாமாகச் சேர்த்து 68 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். 175 பேர் காயமடைந்தார்கள். அங்கு கட்டப்பட்டுக்கொண்டிருந்த சூரன் சிலையும் அழிக்கப்பட்டது.

2மத்தியகிழக்கு வீதி, குருநகரைச் சேர்ந்த வத்சலா கனகரட்ணம் என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,

“நாம் புனித பத்திரீசியார் கல்லூரியில் தஞ்சமடைந்திருந்தோம். ஒக்ரோபர் 27 ஆம் திகதி,சாப்பாட்டுச் சாமான்கள் வாங்குவதற்கான என்னுடைய கணவர் சாவகச்சேரிச் சந்தைக்குச் சென்றார். அவர் திரும்பி வராததால் நான் கவலையடைந்தேன். மூன்றாம் நாள் என்னுடைய கணவர் பழனியாண்டி கனகரட்ணம் சாவச்சேரி சந்தையில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்ற செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. அவருடைய சடலம் சாவகச்சேரி சேமக்காலையில் புதைக்கப்பட்டதாகவும் அறிந்துகொண்டேன். நான் தற்போது கர்ப்பமாக இருக்கின்றேன். அத்துடன் கணவர் இறந்தபின்னர் எனக்கு எந்த வருமானமும் இல்லை.”

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)

01 இளையதம்பி நாகராசா ,   கமம், 50
02 இராசையா திரவியம் மரியாம்பிள்ளை,    விவசாயம், 32
03 இராசநாயகம் நந்தினி,   மாணவி, 20
04 இராசநாயகம் அருந்தவராசா, மாணவன், 13
05 இராசா சிறிதரன், வியாபாரம்,26
06 இராசதுரை இராசேந்திரபோஸ், மாணவன், 18
07 இராசசிங்கம் மனோகரன், கைத்தொழில், 38
08 இராசசிங்கம் கௌரிதாஸ்,மாணவன், 20
09 நாகமுத்து தங்கம்மா,வீ.பணி, 66
10 நாகமுத்து தவராசா,சீவல்,27
11 நாகராசா புஸ்பராசா,  13
12 நாகராசா தனலட்சுமி ,  21
13 நாகராசா மகேஸ்வரி  , 41
14 நாகராசா சண்முகராசா ,10
15 நல்லதம்பி இராசையா, வியாபாரம்,  56
16 கனகு பொன்னு  ,  57
17 கந்தையா மனோன்மணி,  வியாபாரம்,  58
18 கந்தன் தங்கம்,  வியாபாரம், 51
19 கந்தசாமி வைத்தீஸ்வரசர்மா,  பூசகர்,  26
20 வைத்தீஸ்வரசர்மா கலைச்செல்வன், 02
21 கந்தசாமி கெந்தீஸ்வரன்,தொழிலாளி, 20
22 கார்த்திகேசு பெனடிக்ற், மத்தியூஸ், வியாபாரம் 32
23 கணபதி மயில்வாகனம், முகாமையாளர், 40
24 பழனியாண்டி கனகரத்தினம், ஊழியர், 34
25 பிள்ளையாங்குட்டி துரைச்சாமி,சாரதி, 49
26 பிலிப்பு இராசேந்திரம்,மேசன், 42
27 வைத்திலிங்கம் மயில்வாகனம், வியாபாரம், 45
28 தம்பு ஜெயரத்தினம், தொழிலாளி, 22
29 தம்பிராசா சந்திரமோகன்,மாணவன், 21
30 மார்க்கண்டு துரைராசா, சுருட்டுத்தொழில், 55
31 முருகேசு நடராசா, இ.போ.ச,,50
32 முருகேசு சிவசுப்பிரமணியம்,இரும்பு வேலை, 41
33 ஆனந்தசாமி அருந்தவசிவனேசன், சாரதி, 25
34 ஆறுமுகம் விஸ்வநாதன்,வியாபாரம், 31
35 அல்பிரட் நொபேட் லூயிஸ் ஸ்ரிபன், தேநீர்க்கடை ஊழியர், 29
36 ஜெயரத்தினம் வீரஜெயபரஞ்சோதி, வியாபாரம், 23
37 கோவிந்தசாமி மகேந்திரன்,வியாபாரம், 27
38 பொன்னுத்துரை கமலேஸ்வரி, மாணவி, 10
39 பொன்னுத்துரை தங்கரத்தினம், வியாபாரம், 56
40 பொன்னுத்துரை மகேஸ்வரி,வீட்டுப்பணி, 49
41 பொன்னுத்துரை மஞ்சுளாதேவி,வீட்டுப்பணி, 28
42 பொன்னம்பலம் கனகசிங்கம்,ஊழியர்,41
43 பொலோறஞ் அரியமலர் இராசசிங்கம்,வீட்டுப்பணி, 65
44 தேசிங்கன் செல்லையா,மாணவன்,14
45 டொனால்ட் நவீன் குண்டேக்ஸ், மின்சார ஊழியர்,20
46 சோமசுந்தரம் சின்னாச்சி, வீட்டுப்பணி,38
47 செல்லத்துரை தயாபரன், மாணவன்,16
48 செல்லத்துரை ரெங்கநாதன்ää கமம்ää 32
49 வெற்றிவேலு சிவசிறி, மாணவன், 18
50 வேலுப்பிள்ளை குணபாலசிங்கம், தொழிலாளி,30
51 வேலுப்பிள்ளை தங்கம்மா, 72
52 வேலுப்பிள்ளை யோகேஸ்வரன், நடத்துநர், 19
53 ஞானமுத்து இரஞ்சிதமலர், ஓய்வூதியர், 63
54 சுப்பிரமணியம் பரந்தாமன்,மாணவன், 12
55 சுப்பையா பொன்னம்மா, வியாபாரம், 60
56 சின்னவன் நாகமுத்து, கமம்,76
57 சின்னவன் செல்லையன், தொழிலாளி,45
58 சின்னராசா அருமைராசா, மெக்கானிக் 33
59 சின்னையா அம்பிகைபாலன்,தொழிலாளி, 27
60 சிதம்பரப்பிள்ளை குமாரசாமி,வியாபாரம், 52
61 சிவக்கொழுந்து மகேஸ்வரன், நகைத்தொழில் , 55
62 சண்முகம் பரராசசிங்கம், வியாபாரம், 34
63 வன்னியசிங்கம் பாஸ்கரன், மாணவன்,19
64 விசுவநாதன் கந்தையா, வியாபாரம்,59
65 எலியாஸ் சிறாயுதீன்,வியாபாரம், 27