இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி 8,500 பேருக்கு தொற்று

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,500 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் சுமார் 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.