இடைநிறுத்தப்பட்டது கொழும்பு பங்குச்சந்தை – எண்ணை விலை 31 விகிதம் வீழ்ச்சி

இன்று (10) கொழும்பு பங்குச்சந்தை மிகப்பெரும் சரிவைச் சந்தித்தால் அது 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கொழும்பு பங்குகள் அனைத்தும் 5 விகித வீழ்ச்சியை கண்டிருந்தன. ஆனால் மேலதிக வீழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சில பங்குச்சந்தைகள் 126 புள்ளிகளாலும், சில 206 புள்ளிகளாலும் வீழ்ச்சி கண்டுள்ளன.

இதனிடையே, உலகில் மசகு எண்ணை விலை 31 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற வளைகுடா போரின் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இது என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாய் எண்ணை 31 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.