ஆவ­ணத்தில் கையெ­ழுத்து வைத்த ஐந்து கட்­சி­களும் இந்­தி­யாவின் முக­வர்­கள்கள்

ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கையொப்­ப­மிட்­டதன் பின்­ன­ணியில் இந்­தி­யாவே உள்­ளது,இந்த ஆவ­ணத்தில் கையெ­ழுத்து வைத்த ஐந்து கட்­சி­களும் இந்­தி­யாவின் முக­வர்­கள்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இந்­தியா விரும்­பாத எதையும் செய்­யா­த­வர்கள் இப்­பொ­ழுது திடீ­ரென இந்­தியா கொடுத்த ஆலோ­ச­னை­யின்­ப­டிதான் அதில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்தல் வெறு­மனே சஜித்,- கோத்­த­பா­ய­விற்­கி­டை­யி­லான தேர்தல் அல்ல. இந்த நாட்­டிலே நடக்கும் ஜனா­தி­பதி தேர்தல் என்­பது கட்­சி­களின் போட்­டி­யல்ல, அதன் பின்னால் நடக்கும் வல்­ல­ர­சுக்­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டி­யாகும்.

ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கையொப்­ப­மிட்­டதன் பின்­ன­ணியில் எதனைச் செய்­வது என்­றாலும் இந்­தி­யாவின் அனு­ம­தியை பெறாமல் இவர்கள் செயற்­பட மாட்­டார்கள். அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள்­இந்­தியா தடை­செய்­தி­ருந்த கோட்­பா­டு­களை எப்­படி ஒன்­றி­ணைந்து கையொப்­ப­மிட்­டார்கள் என்­ப­துதான் கேள்வி.

தேர்­த­லுக்­காக அந்த அறிக்­கையில் கையொப்­ப­மிட்­டார்கள் என்­பது ஒரு­பக்­க­மி­ருக்க தேர்­த­லுக்­காக மட்­டுமே தாங்­களும் கொள்­கை­வா­திகள் என காட்டிக் கொள்­வ­தற்­காக மட்டும் அதில் கையொப்­ப­மிட்­டி­ருக்க மாட்­டார்கள். இந்த செயலின் ஆழத்தை மக்கள் சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும்.

தேசம் என்ற கோட்­பாட்டை நக்கல் அடித்து நையாண்டி செய்­த­வர்கள், தமி­ழர்­களின் இறைமை என்­பதை நிரா­க­ரித்­தார்கள். இனப்­ப­டு­கொலை தீர்­மா­னத்தை நிரா­க­ரித்­தார்கள்.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு இலங்­கையை கொண்டு சென்­றால்தான் தமிழ் மக்­க­ளிற்கு நீதி கிடைக்கும் என்ற கோட்­பாட்டை நிரா­க­ரித்து நையாண்டி செய்­தார்கள். கூட்­ட­மைப்பு மட்­டு­மல்ல கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தங்­களை கொள்­கை­வா­தி­க­ளாக காண்­பித்த விக்­னேஸ்­வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யினர் போன்­ற­வர்­களும் தேசம், இறை­மையை நிரா­க­ரித்­தார்கள்.

தமிழ் மக்கள் பேர­வையின் தீர்­வு­திட்டம் வரும் நிலையில் விக்­னேஸ்­வரன் இவற்றை கைவிட்டு மாகா­ண­ச­பையில் ஒரு தீர்வு யோச­னை­களை தயா­ரித்து அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு சமர்ப்­பித்தார். அவ்­வா­றான நிலையில் இது­வரை தமி­ழர்­களின் அடிப்­படை கோட்­பா­டு­களை நிரா­க­ரித்து வந்த தரப்­புக்கள் திடீ­ரென எழுந்து எக்­கா­ரணம் கொண்டும் கைவி­டக்­கூ­டா­தென 2009இலி­ருந்து நாங்கள் சொல்லி வந்த கோட்­பா­டு­களை கொள்­கை­ய­ளவில் ஏற்­று­ஆ­வ­ணத்தில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். எப்­படி இந்த விசித்­தி­ர­மான செயல் நடந்­தி­ருக்க கூடும்?

கோத்­த­பாய பின்­னா­லுள்­ளது சீனாவும் அதன் சார்பு நாடு­களும் சஜித்தின் பின்­னா­லுள்­ளது இந்­தி­யாவும் மேற்கு நாடு­களும். இந்த ஆவ­ணத்தில் கையெ­ழுத்து வைத்த ஐந்து கட்­சி­களும் இந்­தி­யாவின் முக­வர்­கள்கள் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த அறிக்­கையின் மூலம், சீனா சார்பு கோத்­த­பாய விற்கு ஒரு செய்­தியை வெளி­யிட்­டுள்­ளனர்.

நீங்கள் இந்­தியா மேற்கு நாடு­களின் நலன்­களை மீறி செயற்­பட்டால் இது­வரை தமிழ் தேசிய அர­சி­யலை தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து இல்­லாமல் செய்ய கூட்­ட­மைப்பின் ஊடாக செயற்­பட்ட நாங்கள் மீண்டும் தமிழ் மக்­களின் அடிப்­படை அர­சியல் கோரிக்­கை­களை வலி­யு­றுத்­து­வது மட்­டு­மல்ல அதை ஆத­ரிக்­கவும் தயா­ராக இருக்­கிறோம் என்­பதை அந்த ஐந்து முகவர் அமைப்பின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அதே­நேரம் இன்­னொரு செய்­தியை கோத்­த­பா­ய­விற்கும் அவர் சார்ந்­த­வர்­க­ளிற்கும் தெரி­வித்­துள்­ளனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஏற்­பாட்டு கூட்டில் ஒற்­றை­யாட்­சிக்­கு­ரிய இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க வேண்­டு­மென நாம் வாதா­டினோம். அந்த கோட்­பா­டு­களை உண்­மையில் ஏற்­றுக்­கொள்­வ­தென்றால் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிப்­பதில் எந்த சங்­க­டமும் இருக்க முடி­யாது.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கடந்த 4 வரு­ட­மாக இடைக்­கால அறிக்­கையை தயா­ரித்து விட்டு இப்­போது நிரா­க­ரிப்­பது வெட்கம். அவர்­களின் முகத்­தி­ல­டித்­ததை போலி­ருக்கும் என சிலர் சொல்­கி­றார்கள்.

இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்­கா­ம­லி­ருப்­பதன் மூலம் கோத்­த­பா­ய­விற்கு இரண்­டா­வது செய்­தியை கொடுத்­துள்­ளனர். சீனாவை கைவிட்டு இந்­திய மேற்­கு­லக வட்­டத்­திற்குள் நீங்கள் இருப்­பீர்கள் என்றால் தமிழ் அர­சி­யலை நாம் ஒற்­றை­யாட்­சிக்குள் முடக்­கவும் தயா­ராக இருக்­கிறோம் என்ற செய்­தியை கோத்­த­பா­ய­விற்கு அனுப்­பி­யுள்­ளனர்

எனவே இந்த விட­யங்கள் தொடர்பில் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம். இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற தரப்­புக்­களில் குறிப்­பாக வெல்லக் கூடிய தரப்­புக்­க­ளான சஜித் பிரே­ம­தாசா அல்­லது கோத்­த­பாய ராஜ­பக்ச தான். இதில் கோத்­த­பாய ராஜ­பக்ச என்­பவர் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் கொடு­ர­மான நபர் என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. அதில் எந்த வித­மான சந்­தே­கமும் இருக்க முடி­யாது. கோத்­த­பாய ராஜ­பக்ச விற்கு வாக்­களிக் முடி­யாது என்­பதில் எந்த சந்­தே­கமும் இருக்க முடி­யாது.

அதே நேரம் சஜித் பிரே­ம­தா­சா­வு­டைய தரப்பும் அதே அள­விற்கு மோச­மான செயற்­பாட்டில் இறங்­கு­வார்கள் என்­ப­தையும் எங்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தப் போரை நடாத்தி இனப்­ப­டு­கொலை செய்­தது கோத்­த­பாய ராஜ­பக்­சவும் சரத் பொன்­சே­காவும் இணைந்து தான். வரப்­போ­கின்ற சஜித் பிரே­ம­தாசா ஆட்­சியில் சரத் பொன்சேகா பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார் என்ற விடயத்தை மிகத் தெளிவாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே எந்தவொரு வேட்பாளரும் வெல்வதற்கு தமிழ் மக்களுடைய அல்லது முஸ்லீம் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுத் தான் வெல்லக் கூடியதான நிலைமை நிச்சயமாக இன்றைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமையில் தமிழ் முஸ்லீம் மக்கள் விரும்பிய வகையில் அவர்களது கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிற கலாச்சாரத்தை நாங்கள் உருவாக்கியே ஆகவேண்டும்.ஆகவே எங்கள் மக்கள் இதை உணர்ந்து இந்தத் தேர்தலில் செயற்பட வேண்டுமென்பதே எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது