ஆப்கானில் காவல்துறை தலைமையகம் மீது கார்க்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஆப்கானின் தென் பகுதியில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது தலிபான் படையினர் மேற்கொண்ட கார்க்குண்டு மற்றும் அதிரடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கன்டகர் நகரத்தில் உள்ள காவல்நிலையம் மீதே நேற்று (18) மாலை இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் தமது பi-டயினர் நேரடியான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தலிபானின் பேச்சாளர் குரி யூசுப் அகமதி தெரிவித்துள்ளார்.

கனரக மற்றும் இலகு இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவல்நிலைய தi-லமையகத்திற்குள் நுளைந்த தலிபான் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 9 பொதுமக்களும், இரண்டு காவல்துறையினரும் கொல்லப்பட்டதுடன், 89 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசின் பேச்சாளர் பகீர் அகமதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தலிபான் படையினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், மேலும் 6 பேர் மோதல்களில் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.