அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகர் பிரிவுக்கு உற்பட்ட எல்லையோர தமிழ்க் கிராமங்களின் நிலங்கள் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்கள மயமாகி வருகின்றது.

மாகாவலி எல் வலையத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்களப் பெயர்களுடன் சிங்களக் கிராமமாகவே மாறிவிட்டது.போகஸ்வெவஇ கழியாணபுரஇ நாமல்புரஇ என பல நாமங்களுடன். தென்னிலங்கை சிங்கள மக்களை அழைத்து வந்து குடியமர்த்தியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான காப்பெற் வீதிஇ மின்சாரம்இ போக்குவரத்து வசதிஇ வீட்டுத்திட்டம் போன்ற பல நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில் தமிழர்களின் பூர்வீக கிராமங்களின் ஒன்றான நெடுங்கேணி வெடிவைத்தகல் தமிழ்க் கிராமம் தற்போது கவனிப்பாரற்று அழிவின் விளிம்பில் உள்ளது.வெடிவைத்தகல் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த சிவகுரு என்ற கிராம வாசியின் மகனின் குடும்பம் மட்டுமே குறித்த கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த மண்ணில் தற்போது ஒரே ஒரு குடம்பம் மாத்திரமே வாழும் அவலநிலையில் அழிவடையும் தருவாயில் வெடிவைத்தகல் கிராமம் மாறிவருகின்றமை வேதனைக்குரிய விடையமே.

கிராமத்தின் வரலாறு

பண்டார வன்னியன் காலத்தில் வெள்ளையர்களுடன் முதல் போர் வெடிவைத்தகல் கிராமத்திலேயே நடைபெற்றது.இக் கிராமத்தில் உள்ள பாறைத் தொடர்களில் துளை அமைத்து வெடிவைத்து போர்செய்து வெற்றிபெற்ற காரணத்தினாலேயே குறித்த கிராமம் வெடிவைத்த கல் என்ற பெயர் சூட்டப்பட்டதாக கிராம வாசிகளின் முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள்.

வவுனியா வடக்கே விவசாயத்துக்கு பேர்போன கிராமங்களில் வெடிவைத்த கல் கிராமமுமொன்று இரண்டு பக்கங்களும் நதிநீரினால் பிணைக்கப்பட்ட அழகிய விவசாயக் கிராமம்.பச்சைப் பசேலென வயல் நிலங்கள்இ மூன்று போகமும் நெல் விளையும் சொர்க்க பூமி பசியென்று வருபவர்களுக்கு விருந்து வைத்து வீடு செல்லும்போது நெல்இ அரிசிஇ குரக்கன்இ திணை, பால்இ தயிரென கட்டிக்கொடுக்கும் மனப்பாங்குடைய மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்த மண். அயல் கிராமங்களான மருதோடைஇ ஊஞ்சால்கட்டிஇ காஞ்சுரமோட்டைஇ கீரிசுட்டான் போன்ற கிராம மக்களுடன் சகோதர உணர்வுடன் உழுதுண்டு வாழ்ந்தனர்.

இவ்வாறு வெறும் வார்த்தைகளினால் ஒப்பிட்டு வர்ணிக்கமுடியாத வெடிவைத்தகல் கிராமத்திற்கு நிலை மாறிய தருணம் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாயகத்தில் அரங்கேறிய கொடிய போரினால் உறவுகளைத் தொலைத்தும்இ உடைமைகளை விட்டுவிட்டு கிராமத்தில் தமக்குத் தாமே எஜமானர்களாக வாழ்ந்த மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாகளாக்கப்பட்டனர். vedivaiththakal 2 அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

அன்று கிராமத்தை விட்டு வெளியேறிய மக்களில் ஒருதொகுதியினர் வவுனியாஇ கிளிநொச்சிஇ யாழ்ப்பாணம்இ போன்ற இடங்களிலும் சிலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று அகதியாக தஞ்சமடைந்தனர். பல வருடங்களாக யாருமற்ற நிலையில் இருந்த கிராமம் அடர்ந்த காடுகளாக மாறியது. யானைகள்இ மற்றும் வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறியது.

கடந்த 2009 ஆண்டு இறுதி போரில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வவுனியாவில் உருவாக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பல வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத துன்பியல் சம்பவங்களை அனுபவித்து 2010 ஆண்டிலிருந்து படிப்படியாக அவரவர் ஊரில் மீள்குடியேற்றப்பட்டனர்.

2010ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெடிவைத்தகல் கிராமத்தில் ஒரு சில குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர் அங்கு வசிக்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆரம்பப் பாடசாலை ஒன்றும் கட்டப்பட்டது. ஆனால் பல வருடங்கள் காடாக இருந்த கிராமத்தில் மக்கள் குடியமரும்போது வனவிலங்குகளினால் உயிராபத்துக்கள் ஏற்பட்டது, கிராமத்துக்கான போக்குவரத்து, மருத்துவம்,மின்சாரம் போன்ற வசதிகள் அரசினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை இதனால் மீள்குடியேறி மக்கள் வெடிவைத்தகல் கிராமத்தில் வாழ்வதற்கு விருப்பின்றி மீண்டும் ஊரைவிட்டு மீண்டும் வெளியேறிவிட்டனர்.

சிங்கள அரசியல் சக்திகளின் நீண்டகால நில அபகரிப்பு

சிங்களக்குடியேற்றம் போன்ற திட்டத்தன் படியே வெடிவைத்தகல் கிராம மக்கள் தாமாகவே வெளியேறினர். தமிழ் மக்கள் வாழும் கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசியல் சக்திகள் பல முட்டுக்கடையாகவே இருக்கின்றனர். எல்லையோர சிங்களக் கிராம மக்களுக்கு வழங்கப்படும் அரச சலுகைத் திட்டங்கள் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தினால் தமிழ் கிராமங்களும் அழிவின் நிலையிலிருந்து காப்பாற்றமுடியும்.vedivaiththakal 5 அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் கிராமத்தில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் வீதி, போக்குவரத்து,மின்சாரம், மருத்துவம், பாடசாலை, மற்றும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக வாழ யானை மின்சார வேலி போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் வெடிவைத்தகல் கிராமம் மீண்டும் எழுட்சி பெறுமென்பதில் ஐயமில்லை.

இதேவேளை வெடிவைத்த கல் கிராமத்தில் வாழ்ந்த பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.நீர்வளமும் நில வளமும் ஒருற்கே அமைந்த வெடிவைத்தகல் கிராமத்தை சிங்களக் குடியேற்றங்களில் இருந்தும் நில அபகரிப்பிலிருந்தும் பாதுகாக்க உங்கள் முதலீடுகளை கிராமத்தில் செய்து மக்களுக்கு வேலைவாய்ப்புங்களை வழங்குங்கள்.

உங்கள் உறவுகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களை சொந்த மண்ணில் வாழ்ந்து விவசாயம் செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குங்கள். அதேபோல உள்நாட்டில் நகர்ப் பகுதிகளில் வாழும் மக்களும் வெடிவைத்தகல் கிராமத்தில் குடியேறி வாழ்ந்தால் மீண்டும் கிராமத்தை செழிப்புடைய கிராமமாக எழுட்சி பெறும். புலம் பெயர் உறவுகளாகிய உங்களின் கரங்களிலேயே எமது பூர்வீக கிராமங்கள் உள்ளன அவற்றை பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தாயகத் தமிழரின் பாரிய கடமையாகும்.