அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைன் விடுவிக்கப்படுகிறார்

இரண்டுவருடங்களுக்கு மேலாக எகிப்திய அரசால் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைனை விடுதலைசெய்யுமாறு எகிப்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆயினு அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஹுசைனின் வழக்கறிஞர் ‘ஒருசில நாட்களில் விடுதலை இடம்பெறலாம் என்கிறார்.

எகிப்த்திய அரசுக்கெதிராக குழப்பங்களை ஏற்றப்படுத்தும்,அதனைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதாக கூறி 2016 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். எனினும் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சட்டுத் தொடர்பாக விசாரணை ஏதும் நடைபேயாமல் 880 நாட்களுக்கு மேல் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். சிறையில் மோசமாக நடத்தப்பட்ட அவரின் கையொன்றும் முறிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக எகிப்தில் குற்றச்சாட்டு இன்றி குறைந்தபட்சம் 20,000 பேர் வரை தடுத்து வைக்க்கப்பட்டுள்ளனர் என மனிதவுரிமை அமைப்புகள் எகிப்திய அரசுமீது குற்றம் சாட்டுகின்றன.