அரச துறைகளில் மொழிப்பெயர்ப்பு தவறுகளை எடுத்துக் கட்டிய கண்காட்சி

யாழ்பல்கலைக்கழகத்தில்  மொழிப்பெயர்ப்பு துறையில் பட்டம்படிக்கும் மாணவர்களால் சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை உலகிற்கு எடுத்துகாட்டும் முகமாக  மொழிப்பெயர்ப்பு சம்மந்தமாகவும் இலங்கையில் மொழிப்பெயர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் கண்காட்சி ஒன்று பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளள கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது.

இந்நிகழ்வானது நேற்று காலை 9 மணியளவில் மொழிப்பெயர்ப்புத்துறை கற்கைநெறியின் இணைப்பாளர் கலாநிதி க. கண்ணதாசன் அவர்களின்  தலைமையில் இடம் பெற்றதுடன், இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தகுதிவாய்ந்த அதிகாரி கே.கந்தசாமியும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறுதுறைகளில் பட்டம்படிக்கும் மாணவர்களுக்கு இலங்கையில் உள்ள அரசதிணைக்களங்களின், மற்றும் அமைச்சுக்களின் பெயர்பலகைகளில் மொழிப்பெயர்ப்புக்கள் எவ்வாறு தவறாக அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும் எடுத்துக்காட்டுடியதுடன் தற்கால இளைஞர் யுவதிகளுக்கு மொழிகளின் அவசியம் பற்றிய விழிப்புணர்வுகளையும் மொழிப்பெயர்ப்புதுறை மாணவர்கள் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.