அரசு உடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கவிருக்கும் தமிழரசுக்கட்சி -அகரன்

தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தனது கட்சியின் பெயரையே சமஸ்டிக் கட்சியாக வைத்துக் கொண்டும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி தீர்வை வலியுறுத்திக் கொண்டும் 2015ம் ஆண்டு மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த தீர்மானங்களையும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களையும் கைவிட்டு யுத்தத்தை வழிநடாத்திய மகிந்தராஜபக்ஸ,கோட்டாபயராஜபக்ஸா இவர்களுடைய ஆட்சியில்
மேற்குறிப்பிட்ட கொள்கைகளை கைவிட்டு எந்த அடிப்படையில் அமைச்சுக்களை பெற்று அபிவிருத்தி செய்யப்போகின்றார்கள்.

இதற்கு அப்பால் இனிவரப்போகின்ற பாராளுமன்ற தேர்தலில் கோத்தா,மகிந்த ஆட்சி அறுதிப்பெரும்பாண்மையோடு (120 ஆசனங்களுக்கு மேல்) ஆட்சி அமைக்கும் போது கூட்டமைப்பின் ஆதரவு மகிந்த அணியினருக்கு தேவைப்படாது ஆகவே எந்த அடிப்படையில் கூட்டமைப்பினர் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளப்போகின்றார்கள்.

அவர்களுக்கு அமைச்சு வழங்கவேண்டிய தேவையும் மகிந்த,கோத்தா அரசாங்கத்திற்கு தேவைப்படாது இந்த நிலையில் தமிழரசுக்கடசி (கூட்டமைப்பு) இதுவரைகாலமும் கடைப்பிடித்து வந்த கொள்கைகள் எல்லாவற்றையும் கைவிட்டது மட்டுமன்றி கடந்த ரணில்,மைத்திரி அரசாங்கத்தில் ஐந்து வருடகாலம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி
தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி,அரசியல் தீர்வு எதையும் பெற்றுக்  கொடுக்க முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் புதிய அரசியல் யாப்பைப் பற்றி அல்லது அரசியல் தீர்வுபற்றி மக்கள் முன் சென்று வாக்குக் கேட்க முடியாத நிலையில் அமைச்சைப் பெற்றுக் கொண்டு அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என்று கூறுவது மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கப்பார்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த மற்றும் கோத்தாவின் மீதுள்ள கோபத்தில் தமிழ் மக்கள் கோட்டபாயராஜபக்சாவுக்கு எதிராக வாக்களித்தனர் இதேபோல் காலம்காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கூட்டமைப்பினருக்கு மக்கள் இது போன்ற ஒரு பாடத்தை புகட்டுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த சுமந்திரன் அமைச்சை பெற்று அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என்ற புரளியை கிளப்பியுள்ளார் என்றே தோன்றுகின்றது.