அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை – மனோ கணேசன்

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை. சிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக அழுத்தமான முடிவுகள் எடுக்கப்பட கூடாது என்று சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. என முன்னாள் அமைச்சரும்இ ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவருமான மனோ கணேசன் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

சுனில் ரத்நாயக்க என்ற நபர்  ஒரு கொலைக் குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவர்  முன்னாள் இராணுவ வீரராக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு இராணுவ வீரர் என்ற காரணத்திற்காக அவரை  விடுதலை செய்து விடலாம் என்பதை நாம் ஏற்க முடியாது. இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

அது ஒருபுறமிருக்க, ரத்நாயக்கா மீது வழக்கு தொடரப்பட்டு  வழக்கு வாதாடப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளால் அவருக்கு எதிராக வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் கொலைக் குற்றவாளி. அவர் கொலை செய்யயப்பட்டதில் சிறுமி ஒருவரும் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.

சிறு குழந்தையைக் கொன்றவர் விடுதலை பெற்ற பின்னர் தனது குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் படம் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டு தமிழ் மக்களால் மட்டுமல்ல, முற்போக்கான சிங்கள மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. இது தற்போதைய அரசாங்கத்தின் மனப்பான்மையை, கொள்கையை பறைசாற்றுகின்றதுஅரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை. சிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தொடர்பாக அழுத்தமான முடிவுகள் எடுக்கப்பட கூடாது என்று சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சாட்சிகள் இல்லா விட்டால் வழக்கு தொடரப்பட வேண்டாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. விடுவிக்கப்படாதவர்கள் பற்றித் தான் பேசுகின்றார்கள். இதேபோல் அரசாங்க காணிகளும் விடுவிக்கப்பட்டது. 2015இற்கு முன் பலர் கொல்லப்பட்டார்கள்.

சட்டவிரோதமாக கடத்தப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள். 2015 ஆட்சிக்கு பின்னர் எவரும் கொல்லப்படவில்லை. சட்டவிரோதமாக காணாமல்போகவில்லை. கைது செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.