அமேசான் காட்டுத் தீயை அணைக்க 44,000 இராணுவத்தினர்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் சுமார் 44,000 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த தீ பரவலுக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பிரேசில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

ரோரைமா, ரொண்டோனியா, டொகான்டின்ஸ் பரா, அக்ரே மற்றும் மட்டோ குரோஸ்ஸோ ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இந்தப் படையினர் அனுப்பப்படவுள்ளனர் எனவும் செய்தி  தெரிவிக்கின்றது.

முதல் கட்டமாக ரொண்டோனியா, மாநிலத் தலைநகரில் விமானங்களின் மூலம் 12000 லீற்றர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.