அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 66 இலட்சமாக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அமெரிக்கா மக்கள் வரலாறுகாணாத பணி இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

இதுவரை 66 இலட்சம் மக்கள் அரசிடம் இருந்து உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க அரச தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 33 இலட்சமாக இருந்த இந்த தொகை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

1982 ஆம் ஆண்டே அதிக அமெரிக்க மக்கள் தமது பணிகளை இழந்திருந்தனர். 695,000 மக்கள் அன்று அரசின் உதவித் தொகைக்காக தம்மை பதிவு செய்திருந்தனர். தற்போதைய தொகை மிக மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

உணவுச் சாலைகள், கடைகள், சினிமா, விடுதிகள், பல நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் அமெரிக்கா இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளது.