அமெரிக்காவின் அழைப்பு நிராகரிப்பு – தொடரும் போர்

வடசிரியப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.

திட்டமிட்டபடி தமது இராணுவ நடவடிக்கையை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளது.

துருக்கி எல்லையருகே உள்ள குர்து நிலைகளின் மீது தொடர்ந்தும் துருக்கி இராணுவம் தாக்குதலை நடத்தி வருவதால், சுமார் 4 இலட்சம் மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

துருக்கியின் தாக்குதலால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையிட்ட நிலையில் சிரியா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் அமெரிக்கா விடுத்த போர் நிறுத்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.

வடசிரியாவிலிருந்து அமெரிக்கா தனது படையினரை மீட்டெடுத்த பின்னரே துருக்கிப் படையினரின் தாக்குதல் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.