அதிகரித்த சுவிஸ் ஆயுத ஏற்றுமதி;மனிதஉரிமை மீறும் நாடுகளுக்கும் விற்பனை

சுவிற்சலாந்தில் உள்ள நிறுவனங்கள் ஆயுத ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. 2019 ஆம் ஆண்டில் 759 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை அவை 71 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக சுவிஸின் பொருளதார விவகாரங்களுக்கான செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தொகையானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 218 மில்லியன் டொலர்கள் அதிகமானது. அதாவது 43 விகித அதிகரிப்பு. டென்மார்க்கே அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளபோதும், அமெரிக்கா, பங்களாதேசம்,ஜேர்மனி மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளும் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளன.protest அதிகரித்த சுவிஸ் ஆயுத ஏற்றுமதி;மனிதஉரிமை மீறும் நாடுகளுக்கும் விற்பனை

கவசவாகனங்களே அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அது தவிர துப்பாக்கிகள், ரவைகள்,போர் விமானங்களுக்கான பாகங்கள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும் சுவிற்சலாந்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இராணுவம் அற்ற சுவிஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு சுவிஸ் அரசு ஆயுதங்களை விற்பனை செய்வதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.