ஃப்ளாய்டின் இறப்பு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது-ஐரோப்பிய ஒன்றியம்

ஜோர்ஜ் ஃப்ளாய்டின் இறப்பு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது,அமெரிக்காவில் நிலவும் இனவெறியை அமெரிக்க மக்கள் ஒன்றினைத்து மாற்றியமைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையின் தலைவர் ஜோசப் போரல் கூறியதாவது,

“அமெரிக்க மக்களைப் போலவே, ஃப்ளாய்டின் மரணத்தைக் கண்டு நாங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அனைத்து சமூகங்களும் அதீத அதிகாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஜோர்ஜ் ஃப்ளாய்டின் மரணம் மிகுந்த துயர் அளிக்கிறது. அதிகார துஷ்பிரயோகத்தின் சாட்சியாக அந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. அனைத்து வகையான இன வெறியையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

அமெரிக்காவில் நிலவும் இனவெறியை அமெரிக்க மக்கள் ஒன்றினைத்து மாற்றியமைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எல்லா உயிர்களும் முக்கியம். கருப்பின மக்களின் உயிர்களும் முக்கியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.