வெலிசறை முகாமிலிருந்த 2,193 கடற்படையினர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு மாற்றம்

11

வெலிசரையிலுள்ள சிறிலங்கா கடற்படை முகாமில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 2,193 கடற்படையினர், தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரையில், கடற்படையைச் சேர்ந்த 578 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 237 பேர், பூரணமாகக் குணமடைந்துள்ளனர் என்றும், ஏனைய 341 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.