வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு

51

வவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் இன்று வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலையே இன்று அப்பகுதியில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் புதிதாக வீடுகளை அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று காலை பதினொரு மணியளவில் அப்பகுதியை டோசர் மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை வேலையாட்கள் கண்டுள்ளார்கள். அதனையடுத்து அப்பகுதி மக்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் , நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அக் கைக்குண்டு செயலிழக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.