வியாளேந்திரனின் சாகா மீது ,பிள்ளையான் குழு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழுவின் பிரதேச உறுப்பினரின் தாக்குதலில் மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிள்ளையான் குழுவின் பிரதேச சபை உறுப்பினரான குமார் என்பவர் மாநகர சபை உறுப்பினர் அசோக்கின் மீது தாக்குதல் நடத்திய தாககூறப்படுகிறது.கூட்டமைப்பின் புளட் அமைப்பின் மாநகர சபை உறுப்பினரான இவர் கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனின் நெருங்கிய சகாவாவார். தாக்குதலுக்குள்ளான அசோக் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலில் ஈடுபட்ட தாக கூறப்படும் பிள்ளையான் கட்சி உறுப்பினரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிகிறது.

பிள்ளையான் குழுவின் அட்டகாசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் அரசியல் போட்டி காரணமாக தமது உறுப்பினர் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக வியாழேந்திரன் சார்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.