விமான விபத்து குறித்து ஆராய சீன நிபுணர் குழு கொழும்பு வருகின்றது

38

ஹப்புத்தளைப் பிரதேசத்தில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வை – 12 ரக விமானம் விபத்துக்குள்ளாகியமை குறித்து ஆராய்வதற்காக சீனாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இந்த விமானமானது சீனாவின் யஹபின் நிறுவனத்தால் தயாரிக் கப்பட்டது. சுமார் 30 லட்சம் டொலர்கள் பெறுமதியானது. விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக இந்த விமானத்தைத் தயாரித்த சீனாவின் யஹபின் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளனர் .

இதேவேளை, சீனாவால் தயாரிக்கப்பட்டு இலங்கை விமானப் படையால் கொள்வனவு செய்யப்பட்ட வை-08 ரக விமானம் கடந்த 2002ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளானதில் 5 படையினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.