விமான நிலையங்கள் எப்போது திறக்கப்படும்? முடிவில்லை என்கிறார் வைத்திய அதிகாரி

17

இலங்கையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விமான நிலையங்களைத் திறக்க ஆலோசனை நடத்திவருகிறோம். இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை. விமான நிலையங்களைத் திறந்தால் மீண்டும் கொரோனா பரவும் அச்சறுத்தல் இருப்பதல் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.