விடுதலைப்புலிகள் பேரவையுடன் -பா. டெனிஸ்வரன்

20

முன்னாள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் த.இ.மலரவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மக்கள் போரவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவுள்ளது. இந்நிலையில் அவர்கள் வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டு வரும் நிலையில் பா. டெனிஸ்வரனும் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுக்கள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவருடனும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவாகவும் தெரிவித்தார்.

அண்மையில் பா. டெனிஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வேட்பாளர் தெரிவின் போது முன்னாள் போராளிகளைளும் உள்வாங்குமாறு பகிரங்கமாக கடிதமொன்றினை அனுப்பியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளிக்காத நிலையிலேயே அவர் விடுதலைப்புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவுள்ளார்.

இதேவேளை அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றில் அதிகளவில் முன்னிலையாகி வருபவரும் வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியொருவருடனும் தாம் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்தார்.