Home செய்திகள் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பௌத்த மதப்பிரார்த்தனை.!

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பௌத்த மதப்பிரார்த்தனை.!

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும், புதிய தேசம் ஒன்றை ஒன்றாகச் சேர்ந்து கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் வி.சகாதேவன் என்ற நபர்சார்ந்த குழுவினர் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்கை ஏற்படுத்தும் நோக்கில் தெற்கு நோக்கிய நடைபயணமென்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பௌத்த மதகுரு ஒருவரின் பௌத்த மத போதனைகள் அடங்கிய வழிபாட்டுடன் அரச மரத்தை வைத்து வழிபட்டு குறித்த அரசமரம் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு புனித இடத்தில் நாட்டி வழிபடுவதற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெரியவருகின்றது.

DSC02822 வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பௌத்த மதப்பிரார்த்தனை.!

வவுனியா கந்தசாமி முருகன் ஆலயத்தில் பௌத்த மத வழிவாடுகள் இடம்பெற்ற அதேவேளை இந்து மத பூசகரால் பௌத்த மதகுருவுக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியயை பூசிவிடப்பட்டது.

இந்த நிகழ்வு மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இளைஞர்களுடனான குறித்த நடைபயணம் வவுனியா நகர்பகுதியூடாக தென்னிலங்கை நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version