வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்.

75

வவுனியாவில் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

மூன்று மாவீரர்களின் தாயாரான தனலட்சுமியினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை மாவீரர்நாளை அனுஸ்டிப்பதற்காக வருகை வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தி மாவீரர்களை வணங்கியிருந்தனர்.