வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?-கனடிய மண்ணில் போராட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான நினைவு நாளான ஒக்டோபர் 1 ஆம் நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?” எனக் கேட்டு நீதிகோரிப் போராடும் தாய்மார்களைக் கொண்ட தாயக உறவுகள் நடத்தும் மாபெரும் எழுச்சிப் பேரணி நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் தொடர்ச்சியாக தாயக மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டு வரும் அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அனைத்து நீதி வேண்டும் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்தும் கனடிய தமிழர்கள் நடத்தும் வலுச் சேர்க்கும் அடையாளக் கவனவீர்ப்புப் போராட்டம் கனடிய மண்ணில் ஸ்கார்புரோ நகரில் Markham & Steel சந்திப்புக்கு அருகில் மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது!

கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!