வரணியில் குளத்தில் குளிக்கச் சென்றவர் பலி!

166
43 Views

யாழ்.வரணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 1.20 மணியளவில் குறித்த நபா் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென நீாில் மூழ்கி காணாமல்போயுள்ளாா்.

இந்நிலையில் அங்கிருந்த சிலா் இதனை அவதானித்து உடனடியாக மேலும் சில பொதுமக்களை அங்கு கூட்டியதுடன் பொலிஸாருக்கும் கூறப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபா் நீாில் மூழ்கி உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here