“வம்சாவளி அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட இலங்கை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள்” – ஐநாவில் திலகர்

158

“வம்சாவளி அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட இலங்கை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள்”  எனும் தலைப்பில் உரையாற்றுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அமெரிக்கா சென்றுள்ளார்.

தென்னாசியாவின் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுடன் செனகல், சோமாலியா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலகளாவிய அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி . தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார். திலகரும், திருமாவளவனும் ஒரே கூட்டத்தின் இரண்டு வேறுபட்ட அமர்வுகளில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.