வட மாகாணத்தில் ஏழு கொரோனா நோயளர்கள்

74
யாழ் மாவட்டத்தில் இந்த வாரம் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு இதுவரை மொத்தம் 7 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த வாரத்தில் இருந்து நோயை உறுதிப்படுத்தும் பரிசோதனைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்பட்டுவந்தன.
இதன் மூலம் உடனடியாக நோயை உறுதிப்படுத்தி நோயாளிகளையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த முடியும். அதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவிற்சலாந்தில் இருந்து வந்த தேவாலைய மதகுருவுடன் தொடர்பில் இருந்த 7 பேரே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேற்கொண்ட ஆராதனை நிகழ்வில் 200 பேர் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Attachments area