வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா மாவட்டம் புறக்கணிப்பு.வீடியோ இணைப்பு

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாகாணமட்ட போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் நடைபெறுவதில்லை என வவுனியா விளையாட்டு வீர்களும் பயிற்றுவிப்பாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாகாண விளையாட்டுப் போட்டிகள் எவையுமே கடந்த 4 வருடகாலமாக வவுனியாவில் நடாத்தப்படவில்லையென விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறந்த தேசிய விளையாட்டு வீரர்கள் திறமையான இளைஞர் யுவதிகள் காணப்படுகிறனர் விளையாட்டு போட்டிகள் நடாத்துவதற்கு பொருத்தமன விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் காணப்படுகின்றபோதிலும் மாவட்டத்தில் மாகாண விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவதில்லை.

இம்முறையும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்ட போதிலும் அதில் வவுனியாவில் எவ்வித போட்டிகளும் நடாத்தப்படுவதாக குறிப்பிடப்படவில்லை.

இதனால் போட்டிகளிளே பங்குபெற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் போன்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.