வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த செய்தி வதந்தி-தென்கொரியா

92
7 Views

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.

இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here