லண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி

19

கோவிட்-19 இன் தாக்கம் பிரித்தானியாவில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குகப்பிரசாத் (75) என்பவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளார்.

பிரித்தானியாவில் லண்டன் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது. அங்கு தமிழ் மக்கள் அதிகம் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கடந்த ஞாயிறு அன்று 621 இறந்துள்ளதுடன், தற்போது வரையில் அங்கு 5,373 பேர் இறந்துள்ளனர்.