Home செய்திகள் ராஜபக்சக்களிடமிருந்து சஜித்திடம் சென்ற ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி

ராஜபக்சக்களிடமிருந்து சஜித்திடம் சென்ற ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள்,அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம்.  அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

முன்னராக கோத்தாவின் கூடாரத்தில் இருப்பதாக கூறப்பட்ட ஜன­நா­யக போரா­ளிகள் கட்சியினர் தற்போது தமது ஆதரவை சஜித்துக்கு வழங்க முன்வந்துள்ளமை வியப்பை ஏற்படுத்துவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.