யாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்

வவுனியா – ஈரப்பெரியகுள பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தங்கல்லையில் இருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்தே கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்த 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்