யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

25

யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் மேலும் இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.