யாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்

244

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வேண்டுமென்று யாழ். ஊடக மையத்தில் இன்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப்போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் போது, யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளே தமது பதிவுகளை இன்று மேற்கொண்டனர்.

2017இற்குப் பின்னர் உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படவில்லை. இதனால் வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு ஒன்றுகூடி இந்தப் பதிவை மேற்கொண்டனர். பாரபட்சம் காட்டாது வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டுமென்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.