மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய விமானப்படை அம்புலன்ஸ் ; கணவன் பலி! மனைவி படுகாயம்

16

யாழ்ப்பாணம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை தம்பகாம் பகுதியில் சிறீலங்கா விமானப்படையின் அம்புலன்ஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்திருக்கின்றார்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது. தம்பதியர் பிரதான வீதியிலிருந்து வலது பக்கம் நோக்கித் திரும்ப முற்பட்டவேளை பின்னால் வந்த அம்புலன்ஸ் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

விபத்துக்குள்ளானவர்கள் இருவரும் நாவற்குளியைச் சேந்தவர்கள் என பளைப் பொலிஸார் தெரவித்தனர். ர். நாவற்குழியைச் சேர்ந்த அந்தோனி அஞ்சலோ (51) என்பவரே சம்பவஇடத்தில் உயிரிழந்துள்ளார்.