மேலும் சில மாணவர்கள் இன்று இலங்கைக்கு.

54

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்கள் இன்றைய தினத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் இருந்து 117 இலங்கையர்களும், காத்மண்டுவில் இருந்து 93 பேரும் இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்படம் மாணவர்கள் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இந்தியாவின் அமரீட்சர் பகுதியில் இருந்து நேற்று (23) 101 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் தம்மை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் தம்மை பதிவுச் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்துக்கொள்பவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான சேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.