மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்! எச்சரிக்கிறது ரஷ்யா

55

ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் விளாடிமிர் ஜாபரோவ் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் உயர் அதிகாரிகளில் ஒருவரான விளாடிமிர் ஜாபரோவ் கூறியதாவது, மத்திய கிழக்கில் பதற்றங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவும் ஈரானும் அணுசக்தி போரை நோக்கிச் செல்கின்றன.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புதன்கிழமை காலை ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினரான விளாடிமிர் ஜாபரோவ் இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.