முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள்; கண்ணிவெடி அகற்றும் குழு மீட்பு

114
7 Views

கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் காணப்படும் எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவனபணியாளர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் முன்னர் அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here