மீண்டும் காணாமல் போன வடகொரிய அதிபர்

11

வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த மாதம் காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்த வடகொரிய அதிபர் கிம் மீண்டும் காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கடந்த மாதம் காணாமல் போன போது, அவர் இறந்து விட்டதாகவும், மூளைச் சாவு அடைந்து விட்டதாகவும் செய்திகள் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உழைப்பாளர் தினம் மற்றும் உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் 21 நாட்களின் பின்னர் வெளியே வந்தார். மீண்டும் அவர் இப்போது காணாமல் போயுள்ளார்.

இதேவேளை வடகொரியாவின் முன்னாள் அதிபர்களின் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.